>>  HomePage

>>  Career

>>  Photopage

>>  ContactMe

உதடு ஒட்டா திருக்குறள்

" வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்."
விளக்கம் :-தம்மிடம் பழி உண்டாகாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர்; புகழின்றி வாழ்பவர் இற்ந்தவர் ஆவர்.இதிலென்ன அப்படி சிறப்பு இருந்துவிடப் போகிறது என்றுதானே எண்ணுகிறீர்கள். ஓரு முறை இத்திருக்குறளை வாசித்துப் பாருங்கள்.நன்றாக கவனித்தால் தெரியும், இக்குறளை வாசிக்கும் பொழுது உதடுகள் ஒட்டாது.

தோழி

நீ எனை தொட்ட போதெல்லாம்
நான் சட்டென தட்டி விட்டேன்
பட்டென விழுந்து தெறித்த-உன்
கண்ணீர் துளிகளில் தெரிந்தது
உடைந்து போன உன் மனது...
அம்மாவுக்கு சொல்ல முடியாததையும்
உடன்பிறப்புகள் உணராததையும்
உன் மடியில் கொட்டி- நான்
அழுத போது - தோழியே
மன்னித்து விடு
நீ தொட்டது -என்
கண்ணீர் துடைக்க தானே...

மங்கள நீராட்டு அல்லது மஞ்சள் நீராட்டு

முற்காலத்தில் பெண்களுக்கு வயது வந்த உட‎ன் செய்யும்முதல் சடங்கு ‏இது.அந்த கால கட்டத்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுட‎ன் திருமணம் செய்து விடுவார்கள்.‏‏இந்த காலம் போல் அப்போது திருமண தகவல் நிலையம் ‏இல்லை.புரோக்கர்கள்,பத்திரிக்கைகள் மற்றும் டிவி கிடையாது.அதனால் வயதுக்கு வந்த பெண்களுக்கு த‎ன் உறவினர்கள்,நண்பர்கள்,ஊரில் உள்ளவர்கள் என்று பலரையும் அழைத்து சடங்கு செய்வார்கள்.அத‎ன் உள் அர்த்தம் என்னவெ‎‎ன்றாள்,எனக்கு வயது வந்த பெண் ‏இருக்கிறாள்.அவளை நா‎ன் திருமணம் செய்ய தயாராய் ‏இருக்கிறே‎ன். பெண் கேட்பவர்கள் கேட்டு வரலாம் எ‎ன்று கூறாமல் கூறுவது தான் இந்த சடங்கின் அர்த்தம்.

பொன்மொழிகள்

1.உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.
2.துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.
3.அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட்.
4.அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன்.
5.தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்.